9

                     Puttalam Maraikar

மரபுக் கதை 4

புத்தளம் கொழும்பிலிருந்து வடக்கே, மேற்கு கரையோரமாக 82 மைல் தூரத்தில் உள்ள ஊர். வரலாறு நிறைந்த ஊர்.புத்தளம் என்றவுடன் உப்புத்தளம் தான் நினைவுக்கு வரும். “எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே, புத்தளம் போனாலும்புத்தியோடு நட” என்று அர்த்தம் தெரியாமல் புத்தளத்தை பற்றிக் குறை சொல்வோருமுண்டு. அந்த வசனம், எந்த ஊருக்குப்போனாலும் புதிய ஊருக்குப் போகாதே. அப்படிப் போனால் புத்தியோடு நட என்பதாகும். வன்னியர் ஆண்ட இடமது.புத்தளத்து துறைமுகம் ஒருகாலத்தில் தென் இந்தியாவுடன் வியாபாரம் செய்யப் பாவிக்கப்பட்டது. அதைச் சுற்றியுள்ளமதுரங்குளி, நுரைச்சோலை, நாவற்காடு, எருக்கலம்பிட்டி, சேனைக்குடியிருப்பு. கற்பிட்டி, ஆனமடுவ, முந்தல். போன்றஊர்ப் பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களாகவே ஒரு காலத்தில் இருந்தது. படிப்படியாக சிங்களப் பெயர்களாக மாறிவிட்டது.
தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடியிலும், கீழக்கரையிலிரும் இருந்து வணிகம் செய்ய வந்த முஸ்லீம்கள்பெரும்பான்மையாக வாழும் ஊர் புத்தளம். மன்னாருக்குப்போகும் பாதையிலும் அனுராதபுரத்துக்குப் போகும் பாதையின்இருபக்கங்களிலும். அடர்ந்த யானைக் காடுகள்.
நான் புத்தளத்தில் சகிராக் கல்லூரியில் 1950ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலம். கல்லூரிக்கு முன்னால் ஒருபிரமாண்டமான, இரண்டுமாடி அரண்மனை போன்ற வீடு. நான் முதல் தடவையாக அது போன்ற வீட்டைப் புத்தளத்தில்.கண்டு அதிசயித்தேன். “அடேயப்பா! இந்தப் பெரிய வீட்டில் எத்தனை அறைகள் இருக்கும்? இது பணக்காரன் ஒருவன் கட்டியவீடாகத்தான் இருக்கும்” என நினைத்து, என் சந்தேகத்தை நண்பன் ரசீட்டை கேட்டேன். அவனுக்கு புத்தளத்துமரக்காயர்களைப் பற்றித் தெரியாததா?
“எனக்கே அவ்வளவுக்கு அந்தவீட்டைப்பற்றித் தெரியாது. காரணம் நான் அந்த வீட்டுக்குப் போனது கிடையாது. ஆனால்அவ்வீட்டுக்குச் சொந்தக்காரரான முகம்மது மஜீத் மரக்காயர்; ஒரு பெரிய பணக்காரர். புத்தளத்தில் ஹஜ் யாத்திரைக்குப்போய் வந்தவர். அதனால் அவரை ஹாஜியார் என்று ஊர்வசிகள் அழைத்தனர்.
ஒருகாலத்தில் கடலில் மரக்கலங்களில் இந்தியாவுக்குப் போய் வணிகம் செய்து வந்ததினால் “மரக்காயர்” என்ற பெயர் பலமுஸ்லீம்களுக்கு வந்தது. மஜீத் மரக்காயர் ஒருவரே ஏராளமான தென்னந்தோட்டங்களுக்கும் உப்பளங்களுக்கும் அதிபதி.இன்னமும் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார். ஒரு பெரிய கப்பல் போன்ற நீண்ட, நீல நிற ஹட்சன் கார்வைத்திருக்கிறார். அந்த வீட்டில் இரு வேலைக்காரர்களைத் தவிர அதிகம் பேர் வசிப்பதில்லை. மேல் வீட்டில் வெளவால்குடிபுகுந்திருக்கிறது. அவர் ஒரு கஞ்சன். ஏழைகளுக்கு உதவமாட்டார். ஏன் இந்தக் காசை வைத்திருக்கிறாரோ தெரியாது?”என்றான் என் நன்பன ரசீட்;
“வீட்டைப் பார்த்தால் ஒரு பேய் குடிபுகுந்த வீடு போல் இருக்கிறதே?” மேலும் வீட்டைப்பற்றி அறிய ரசீட்டைக் கேட்டேன்.
“சரியாகச் சொன்னாய்! … அவரைப் பேய்வீட்டு மரக்காயர் என்று தான் அழைப்பார்கள். மஜீத் மரக்காயரின் தகப்பன் நஞ்சுவைத்து இந்த வீட்டில் கொலை செய்யப்பட்டார்.”
“என்ன? … கொலை செய்யப்பட்டாரா? யாரால்? எதற்காக?” நான் ரசீட்டைக் கேட்டேன்.
“இவ்வீட்டின் உரிமையாளரான மஜீத் மரக்காயரின் மாமனாரால்.”
“எதற்காக?!”
“வேறு எதற்காக? எல்லாம் சொத்துக்காகத்தான்” என்றான் ரசீட்
“இவ்வளவு சொத்தையும் யார் சேர்த்தது? தற்போதைய உரிமையாளரின் தந்தையா?
“இல்லை! … இவரின் பாட்டானாருக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதுவே ஏழையாக இருந்த அவரைத் திடீரென்றுபணக்காரனாக்கிற்று.”
“கேட்க ஒரு சுவாரசியமான கதை போல் இருக்கிறதே ரசீட்! இது உண்மைக் கதையா? … அல்லது நீ எனக்கு ரீல்விடுகிறாயா?”
“என் பாட்டி பொய் சொல்லமாட்டா… அவ எனக்குச் சொன்ன படியால் உண்மையாகத்தான் இருக்கும். சும்மா வந்த முதிசப்பணமாகையால் மரக்காயர் கஞ்சனாக வாழ்கிறார்.”
“முழுக்கதையும் எனக்குச் சொல்லேன்… எனக்குப் பேய்க் கதை கேட்கச் சரியான விருப்பம்” என்று அவன் வாயைக்கிண்டினேன்.
ரசீட்டும் தனது கற்பனை கலந்த பேய்வீட்டு மரக்காயர் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
*******
“கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1920 மட்டில் புத்தளத்தை சுற்றி ஒரே அடர்ந்த, கருவேல மரக் காடுகள்.அப்துல்காதர் என்ற ஏழை ஒருவன் காட்டில் விறகு வெட்டி, அதை விற்றுப் பிழைத்து வந்தான். குடிசையில் வாழ்ந்தஅவனுக்குச் சொந்தமாக ஒரு மாடும், வண்டியும் தான் இருந்தது. வண்டியில் காட்டுக்குப் போய் மரங்களை வெட்டும் போதுசில விலை உயர்ந்த கருங்காலி மரங்கள் இருப்பதைக் கண்டு அதை வெட்டிக் கொண்டு வந்து விற்று, கொஞ்சப் பணம்சம்பாதித்தான். முஸ்லீம்கள் சீதனம் கொடுத்துத் தான் பெண் எடுப்பது ஊர் வழக்கம். கிடைத்த காசில் ஒரு அழகியபெண்ணைக் காதர் திருமணம் செய்தான்.
பெண்ணோ காசாசைப் பிடித்தவள், ஆனால் அழகி. மேலும் கருங்காலி மரங்களைக் கண்டுபிடித்து வெட்டிவந்து காசுஉழைக்கும் படி கணவனுக்கு யோசனை கூறினாள். ஒரு நாள் மரங்களைத் தேடி காட்டுக்குள் வெகுதூரம் போன போதுகளைப்பால் ஒரு பெரிய முதிரை மரத்தின் கீழ் காதர் படுத்துத் தூங்கிவிட்டான். அவன் தூங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒருபாம்பு புற்று. அதில் இருந்த பாம்பொன்று அவனைத் தீண்டியது. அவன் உடலில் விஷம் ஏறியது. ஆனால் அவனது நல்லகாலம் அருகில் இருந்த எறும்புப்புற்றில் இருந்த எறும்புகள் அவனைக் கடித்ததால் அவனின் உடம்பில் பாம்பின் விஷம்நீங்கி எறும்புகள் எல்லாம் இறந்து கிடந்தன. அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆனாலும் அந்த நீண்டநித்திரைக்குள் அவன் கண்ட பயங்கரக் கனவு மட்டும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டது. கனவில் வந்த பேயின்தோற்றத்தை நினைத்தாலே அவனது உள்ளம் பகீர் என்றது. அதோடு அது சொன்ன விடயங்கள் அவனுக்கு பெரும்குழப்பமாகவும் இருந்தது. அந்தப் பேய் ஒரு புதையலுக்கு காவலாக இருப்பதாகவும். காலம் காலமாக அப்புதையலைத்தான் காத்து வருவதாகவும்> அப்புதையல் வேண்டுமாகில். காதர் தன் அழகிய மனைவியை ஒரு இரவு மட்டும் கருங்காலிமரத்தடியில் கொண்டு வந்து விட்டுப் போகும்படி கட்டளையிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு வீடுதிரும்பிய காதர், ஆறுமாதத்திற்கு முன்னர் திருமணமாகிய தன் அழகிய மனைவிக்கு எப்படிப் பேயின் வேண்டுகோளைஎடுத்துச் சொல்வது என்று கவலைப்பட்டு யோசித்தபடி இருந்தான். அவனின் கவலையான முகத்தைக் கண்ட காதரின்மனைவி காட்டில் என்ன நடந்தது?! ஏன் கருங்காலி மரத்தை வெட்டி வராமல் வெறுங்கையோடையா வந்தனீர்? … எனக்கோபமாகக் கேட்டாள்.
காதருக்கு உண்மையை மறைக்க முடியவில்லை. பேயின் வேண்டுகோளை மனைவிக்கு விபரமாய்ச் சொன்னான்.
பண ஆசை பிடித்த அவள் “இதற்கேன் யோசிக்கிறீர்கள்? பேய் என்னை ஒன்றும் செய்யாது. கொண்டு போய் என்னை அந்தமரத்தடியில் ஒரு இரவுக்கு அது கேட்ட மாதிரி கொண்டுபோய் விடும்; திரும்பக் காலையில் என்னை வந்து கூட்டிட்டுவாரும்! பேய் கனவில் சொன்னபடி அது பாதுகாக்கும் புதையல் எமக்குக் கிடைத்தால், நீர் கஷ்டப்பட்டு மரம் வெட்டிப்பிழைக்கத் தேவையில்லை. அந்தக் காசிலை பெரிய வீடு கட்டி, தோட்டம் வாங்கி சௌகரியமாக வாழலாம்.” என்றாளகாதரின் மனைவி;
“நல்ல பேராசைக்கார மனைவி! காதர் அவள் சொன்ன மாதிரி செய்தானா?” என்றேன் ஆவலுடன்.
“செய்யாமல் இருக்க மனைவி விடுவாளா? … ஒருத்தருக்கும் தெரியாமல் அன்றிரவே மனைவியை அந்தக் கருங்காலிமரத்தடியில் கொண்டு போய் விட்டிட்டு, பாதுகாப்புக்கு ஒரு கோடரியையும் அவளுடைய கையில் கொடுத்துவிட்டு வீடுதிரும்பியிட்டானாம் காதர்.” மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் காதர்.
“அடுத்த நாள் காலை என்ன நடந்தது? சொல்லு சொல்லு” என்றேன் ஆர்வத்துடன்
“காதர் அடுத்த நாள் காலை போய் பார்த்தபோது மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் ஆடை அரை குறையாககலைந்திருந்தது. அவளை எழுப்பி என்ன நடந்தது? என்று கேட்டான் காதர். தான் தூங்கி விட்டதால் தனக்கு நடந்ததுஎன்னவென்று தெரியாது என்று சொன்னாள் அவள். எதற்காகச் சேலை அரைகுறையாகக் கலைந்திருந்தது என்று அவன்மனைவியிடம் கேட்டதற்கு அவளால் பதில் சொல்லமுடியவில்லை. ஆனால் பேய் கனவில் வந்து தன்னோடு உடலுறவுவைத்தது போன்ற ஒரு நினைவு…” என்றாள் அவள் மயக்கத்தில்.
“என்ன! … பேயைக் கனவில் கண்டாயா? என்று காதர் கேட்டதற்கு, ஆமாம்! அது கனவில் என்னைத தழுவிப் பேசிப்புதையல் இருக்கும் இடத்தையும் சொல்லிப்போயிற்று…” என்றாள்.
“என்ன நீ உண்மையைத்தான் சொல்லுகிறாயா? அப்படியால், கனவில் உன்னோடு பேய் உறவு வைத்தபின் புதையல்இருக்குமிடத்தைச் சொல்லிப்போனதா?” என்றான் காதர்.
“ஆமாம்! இங்கிருந்து வடக்கே ஐம்பது யார் போனால் ஒரு பெரிய சடைத்த கருங்காலி மரம் இருக்கிறதாம். அதன் கீழ்மண்பிட்டியொன்று இருக்கிறதாம். ஆதைச்சுற்றி பல கற்கள் கூட இருக்கிறதாம். அந்த மண்பிட்டியை சில அடிகள்ஆழமாகத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்று எனக்குப் பேய் சொல்லி மறைந்தது” என்றாள் காதரின் மனைவி.
“ரசீட்! அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா?” நான் ஆவலுடன் நண்பனைக் கேட்டேன்.
“புதையல் கிடைக்காமலா இந்தப் பெரிய வீடு வந்திருக்கும்.? பேய் சொன்ன மாதிரி கணவனும் மனைவியுமாகச் சேர்ந்துகருங்காலி மரத்துக்குக் கீழ் இருந்த மண்பிட்டியை ஆறடி ஆழத்திற்கு தோண்டிய போது மூன்று குடங்களில் தங்கநாணயங்கள் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதை ஊருக்குத் தெரியாமல்கொண்டுவந்து வீட்டில் புதைத்து வைத்துக் காணி நிலம் வாங்கி. வீடு கட்டி பெரும் பணக்காரனானான் அப்துல்காதர்”
“அப்போது! அந்தப் பேராசைக்கார மனைவிக்குத் தான் பணக்காரியானது பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே? …
“பாவம் அவளுக்குப் பேய் மூலம் கிடைத்த செல்வத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை! அந்தச் சம்பவம் நடந்துசில நாட்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்தின் போது அவளுக்குக் கிடைத்த ஆண் குழந்தைக்கு ஒரு சிறு குட்டி வாலும்இருந்தது. காதரின் துரதிட்டம். பிரசவத்தின் பின், மனைவி காலமாகிவிட்டாள்.”
“என்ன ரசீட் சொல்கிறாய்?!… பிறந்த பிள்ளைக்கு வாலா? நம்பமுடிவில்லையே!”
“நானும் முதலில் நம்பவில்லை தான். அவள் குழந்தை பெற்ற போது உதவிய மருத்துவிச்சி சொன்னதைத் தான் உனக்குசொல்லுகிறன. பேயுக்குப் பிறந்த குழந்தையாக இருந்திருக்கலாம், அதுதான் அது வாலுடன் பிறந்திருக்கும்.”
“அப்போ மரக்காயரின் தகப்பனுக்கு வால் இருந்திருக்கிறது என்று சொல்கிறாயா”?
“அமாம்! இது மருத்துவிச்சி சொன்னதைக் கேட்டு என்பாட்டி எனக்குச் சொன்ன கதை. அந்த வால் உள்ள மனுசனைத் தான்சொத்துக்காக நஞ்சு வைத்துக் கொன்று விட்டார்கள். அப்போது இந்த மரக்காயருக்குப் பத்து வயது. நல்லகாலம். அந்த வால்வைத்த மனிதன் சாகும் போது சொத்தையெல்லாம் மகனுக்கு உயில் எழுதிவைத்துவிட்டு இறந்திருந்ததால்இனித்தவர்களால் சொத்தை உரிமை கொண்டாட முடியவில்லை. மரக்காயரின் பாட்டன் புதைத்து வைத்த ஒரு குடம் தங்கநாணயம் இன்னும் இந்த வீட்டில் இருக்கிறதாம். அதைக் காக்க இறந்த வால்மனிதனின் ஆவி அதை ஒருவரும்;நெருங்காதவாறு இந்தப் பேய்வீடடைச் சுற்றிச் சுற்றி வருகிறதாம். இது தான் இந்த வீட்டின் வரலாறு” என்று மரைக்காயரின்பூர்வீகம் முழுவதுமாய்ச் சொல்லி முடித்தான் என் நண்பன் ரசீட்.
ரசீட் சொன்ன கதையை நம்புவதா? இல்லையா? என நான் யோசித்தபோது, பேய்வீட்டு மரக்காயரின் ஹட்சன் கார், வீட்டுக்குமுன் வந்து நின்றது. ஒரு வேலை இவருக்கும் வால் இருக்கிறதோ, அது தான் ஒரு பெண்ணும் இவரைத் திருமணம் செய்யமுன் வரவில்லையோ! என நினைத்தேன். அவர் என்னைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. பயத்தில்பேயறைந்தவன் மாதிரி நான் நின்றேன்

 

.

♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book