25

Seenigama_Muhudu_Viharaya

மரபுக் கதை 20

 

 சீனிகம கோவில்

               

 காலி கொழும்பு பாதையில் கடற்கரை ஓரமாக உள்ள ஊர் ஹிக்கடுவ. இது உல்லாசப் பயணிகள் விரும்பும் இடம். இக்கிரமத்தின் கடற்கரைக்கு அருகே. கடலில்., ஒரு குன்றில் சீனிகம கோவில் அமைந்துள்ளது. மரபு வழியே உருவாகிய கிராமபுர டெவொல தெய்வத்திற்கான கோவில் இது.  தமிழ்நாட்டில் மதுரைவீரன் போன்ற கதை போல், இலங்கையின் தென் கரையோரப்பகுதியில் வாழும். மீனவ இன மக்கனால் மந்திரசக்தி உள்ளவனாக நம்பப் படும் டெவொல என்ற வீரனுக்கு கோவில் அமைத்து வழிபட்டுவருகிறார்கள். மீனவர்களையும் அவ்வூர் பிக்குகளையும் டெவொல தெய்வம் பாதுகாக்கும் என கரையோரச் சிங்கள மக்கள் கருதுகிறார்கள்.

இதிகாசத்தின் படி டெவொல என்ற இளவரசன் இந்தியாவில் மல்லா நகரத்தை ஆண்ட ஸ்ரீ சுவர்ண ராமசிங்கா என்ற மன்னனுக்குப் பிறந்த ஏழு ஆண் குழந்தைகளில் ஒருவன். இந்தகதை இராமனுக்கும்> இராமாயணத்தில் வரும் இராமனுக்கும், மிதிலைக்கும் தொடர்பில்லை. சுவர்ண ராமசிங்கா மன்னனுக்கு தேடாபதி, குணபதி, மித்தாபதி, ரதாபதி, மிகிபதியாசாபதி, அக்னிபதி என்ற பெயர்களல் ஏழு மனைவிமார் இருந்தனர். இந்த ஏழு மனைவிமார்களும்; டெவொல், ஹிருராஸ், சந்தரராஸ், அக்னிராஸ், மகராஸ், குடாராஸ், சமிராஸ்,; என்ற பெயர்களில் ஏழு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர் எடுத்தனர். டொவலொக்கு அந்துன குரும்பர. சந்துன் குரும்பர. ஏர்டி குரும்பர. மல் குரும்பர.  தல குரும்பர. குரும்ப. வாதிகர குரும்பர என்ற வேவவேறாள ஆறு பெயர்களும். உண்டு.

முற்காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் பெரும்பாலும் மிகைப் படுத்தபடடு மக்களிடையே நம்பிக்கையை வளர்த்த கதைகள். அவை மூட நம்பிக்கைகளுக்குத் துணைபோயின.

 விஜயன் இலங்கைக்கு வரமுன்பிருந்தே சீனிகம கோவில் இருந்து வந்ததாகப் பல வரலாற்றுக்காரர்களின் கருத்து. அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால் பத்தினி வழிபாடு சிங்களவர்களிடையே விஜயனின் வருகைக்குப் பல வருடங்களுக்குப் பின்னரே ஆரம்பித்ததாக சரித்திரம் கூறுகிறது. இளவரசன் விஜயனை அவனோடு அவன் நணபர்கள் 700 பேரையும் கப்பலில் ஏற்றி அவன் தந்தை எப்படி நாடு கடத்தினாரோ. அதே போல் வயது வந்தவ்hகளையும் மிருகங்களையும். டெவொலாவும் அவனது ஆறு சகோதரர்களும் கொன்று வந்ததினால்> மக்கள் மன்னனிடம் போய் முறையிட்டனர். கோபமுற்ற மன்னன், டெவோலையும் அவனது ஆறு சகோதரர்களையும் தோணியில் ஏற்றி நாடுகடத்தினான்.  தோணி யாழ்ப்பாணம், பாணதுறை. டொன்ரா. காலி ஆகிய துறைமுகங்களை சென்றடைந்த போது டொலாவையும் அவனது சகோதரர்களையும் கரை சேர அத்துறைமுகங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. இறுதியில் தோணி காலியில் இருந்;து, வடக்கே 14 மைல்; தூரத்தில் உள்ள சீனகம கரையை அடைந்தது.

சக்ரா என்ற தெங்வம் அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்தது. ஆனால் அவர்கள் கரை சேர்ந்த பகுதிக்கு பத்தினி தெய்வம் என்ற கண்ணகி அம்மன் காவல் தெய்வமாகையால் அத்தெய்வம் ஏழு தீக்குன்றங்களை உருவாக்கி அவர்களை கரை சேர விடாமல் தடுத்தது. சகோதரரர்கள் தங்கள் ஆயுதங்களைத் தீயுக்குள் வீசி எறிந்தார்கள். தீயானது நீராகியது. அந்த ஏழு பேர்களில் டேவொல மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்தது, அவன் மேல் பத்தினி தெய்வம் பரிதாபப்பட்டு கரை சேர அனுமதித்தது.

ஸ்கந்த (முருகன்) கடவுள் பத்தினி தெய்வத்தோடு ஒரு உடன்பாடு செய்து டெவோலை அங்குவாழ வழிசெய்தது. சீனிகம. உனவட்டுன. தொடன்துவ. வீராகொட. ஜின்தொட்ட. அம்பலான்கொட. பாணந்துறை ஆகிய ஊர்களில் வாழுபவர்கனின் நோய்களை குணப்படுத்துவதற்காக டெவொலவுக்கு காணிக்கைகள்; செலுத்திளார்கள்.

டெவொல சீனிகமவில் இருந்து 6 மைல் தூரத்தில உள்ள வீராகொட கிராமத்தில் வாழந்த ஒரு பெண்ணோடு வாழத் தொடங்கினான். வேலையில்லாத டெவொல> சீனிகமவுக்கு தினமும் ஒரு கைத்தடியோடு வீராகொடவில் இருந்து போய்வந்hன்.  போய் வீடு திரும்பும்போது அரிசி> மீன் தேங்காய்கள் ஆகியவற்றை கொன்டு வ்து தன் வைப்பாட்டிக்கு கொடுப்பான். அவனோடு வாழந்த அவனது வைப்பாட்டிக்கு அவனின செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி வேலை இல்லாத டெவொலவால் இப்பொருட்களைக் கொண்டுவர முடிந்தது என அவன் மேல் சந்தேகித்தாள்.

டெவொலவுக்கும் அவனுக்கு வைப்பாட்டியாக இருந்த பெண்ணுக்கும்> சில வருடங்களில் ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்ததும் அப்பெண் தன் சந்தேகத்தைப் போக்க “மகனே உன் தந்தைக்கோ வேலை இல்லை> ஆளால் தினமும் சீனிகமவுக்கு போய் அரிசி, மீன். தேங்காய்கள் கொண்டு வருகிறார். அது எப்படி அவரால் முடியும் என்பதை நீ அறிந்து வா என்று இரகசியமாக மகனுக்குச் சொல்லி அனுப்பினாள். மகனும் டெவொலவுக்க தெரியாமல் அவனைத் தொடர்நது சென்று நடப்பதை அவதானித்து வீடு திரும்பி வந்தான்.

“அம்மா என் தந்தை கடற்கரை மண்ணை அரிசியாகவும்> மீன்களாகவும் தன் கைத்தடியின் மந்திரசக்தியைக் கொண்டு மாற்றுகிறார். கடற்கரை ஓரத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கைதடியைப் பாவித்து தேங்காய்கள் ஆய்கிறார். அவருடைய கைத்தடி மந்திரசக்தி வாய்ந்தது” எனறு தாயுக்குச் சொன்னான். இந்தக் கதை ஊர் மக்களிடம் வெகு விரைவாகப் பரவியதும. அவர்கள் டெலோவை ஒரு மந்திரவாதி என்றும் அதனால் எதையும் செய்க் கூடியவன் என நினைத்தனர்.

 தனது இரகசியத்தை வைப்பாட்டியும் மகனும் கண்டுபிடித்துவிட்டார்கள் என அறிநது கோபப்பட்ட டெலொவா அவர்கள் இருவரையும் கொலை செய்தான் டெலொவா தன் கைத்தடியைத் தன்னோடு கொண்டு செல்லாமல் ஊரை விட்டு வெயியேறினான். அக் கைத்தடியானது, கிடைக்கப் பெறமுடியாத ஒரு பெரும் மரமாக வளர்ந்தது. ஊர்வாசிகள் டொலோவவை வணங்கக் கூடிய கடவுள் எனத் தீர்மானித்து காணிக்கைள் செலுத்தி வணங்கத் தொடங்கிளர். இன்றும் சீனிகமவைத் தாண்டிச் செல்வோர் உண்டியலில் காணிக்கை செலுத்தியெ; செல்வார்கள்; தங்களுக்கு தீமை விளைவித்தவர்களுக்கு எதிராக, டெலொவோ தெய்வத்திடம் தமது எதிரிகளுக்கு ஏதாவது தீங்கு நடக்வேண்டும்; என வேண்டுகோள் வைப்பார்கள்; இது ஒரு வித சூனியமாகும். எதிரிக்கு சாபம் கொடுக்கும் போது கல் உரலில் மிளகாய் இடித்துபடியே சாபம் கொடுப்பது இவ் ஊர் வழக்கம்.

இப்பகுதிக்கு உருத்தான பேய் நடனம் (Devil Dance) பாடல்களுடன் கப்புரால என்று அழைக்கப்படும் பூசாரியின் தலமையில் டெவெலோ என்ற தெய்வத்துக்கு சமாப்பணமாக உருவந்து ஆடுவார்கள். நடனத்துக்கு ஏற்றவாறு மண்வாசனையுள்ள பேச்சுவழக்கு மொழியில் பாடல்கள் பாடுவார்கள். பேய்களின் முகத் தோற்றத்தில் முகமூடிகளை தயாரித்து, அம்பலாங்கொடை பகுதியில் விற்பனை செய்கிறார்கள். அம் முகமூடிகளுக்கு சுற்றிலாப் பயணிகளிடையே ஏகப்பட்ட கிராக்கி உண்டு.

                                                     ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book