7

       idol veeramakaliamman-hindu-temple-c90hme

மரபுக் கதை 2

 வீரமகா காளிம்மன்

 வீரமகாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்ரவர்த்தியினால் ஸ்தாபிக்கப்பட்டு பின் சங்கிலிமன்னனால் பூஜிக்கப்பட்ட அருள் மிக்க கோயில். போர்துக்கேயாகளோடுப் போருக்குப் புறப்படும் போது அம்மனைத்தரிசித்து செல்வது சங்கிலி மன்னனின் வழக்கம். சங்கிலி மன்னனின் வாள் இன்றும் கோயிலிலுண்டு. விஜயதசமியன்றுநடக்கும் மானம்பூ வேட்டைத் திருவிழாவன்று வாழையை வெட்டுவதற்கு அவ்வாள் பாவிக்கப்படுவது வழக்கம். 1591 ம்ஆண்டு ஒக்டோபர் மாதம் போர்த்துக்கேயரின் படை யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்ற நல்லூரை நோக்கிச் சென்றது.வீரமகாகாளியம்மனை தரிசித்து போர்த்துக்கேயருடன் போர் தொடுத்தான் சங்கிலி அரசன். வீரமகாகாளியம்மன்கோயிலுக்கும் நல்லூருக்குமிடையே உள்ள பகுதியில் நடந்த போரில் பல தமிழ் வீரர்களும் யோகி ஒருவரும்கந்தசாமிகோயிற் பூசகர் ஒருவரும் மாண்டனர் என முதலியார் செ இராசநாயகம் யாழ்ப்பாண சரித்திரம் என்ற தன் நூலில்குறிப்பிட்டுள்ளார். 
நல்லூர் கந்தசாமி கோயிலில் இருந்து பருத்தித்துறை வீதி வழியே யாழ்நகரை நோக்கிப் போகும் வழியில் அரை மைல்தூரத்தில் இக்கோயில் உள்ளது. நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் செல்பவர்கள் சக்தியை முதலில் தரிசித்தே செல்வார்கள்.கோயிலுக்கு எதிர்பக்கத்தில் அம்மச்சியா குளம் உண்டு. இக்குளத்தின் நீர் மாசுபடுத்தப்பட்ட படியால் பொது மக்கள்பாவிப்பதில்லை. 1478ல் கனகசூரியனுக்கு பின் அவனது முதற்குமாரன் சிங்கைபரராஜசேகரன் என்ற நாமத்துடன்அரசனானான். கடவுளிடம் பாதுகாப்பு வேண்டி பலகோயில்களை இராஜதானியை சுற்றி. கிழக்கே வெயிலில் உகந்தபிள்ளையார் கோயிலும், மேற்கே வீரமகாகாளியம்மன் கோயிலும், வடக்கே சட்டநாதர் (சிவன்) கோயிலும், தெற்கேசைலாசபிள்ளையார் கோயிலையும் அமைத்தான். மற்றிரு கோயில்களான தையல்நாயகி அம்பாள் கோயிலும்சாலைவிநாயகர் கோயிலும் இருந்ததிற்கு ஆதாரம் உண்டு ஆனால் அடையாளம் காணப்படவில்லை.
வீரமகாகாளியம்மன் கோயில் சரித்திர வரலாறு பெற்ற கோயில். கோயில் இருக்கும் பகுதி சங்கிலி அரசனின் காலத்தில்யுத்தப் பூமியாகவிருந்தது. கோயிலைப்பற்றிய பல கதைகளுண்டு. ஒரு நாள் நள்ளிரவில் சிலர் சினிமா பார்த்துவிட்டுகோயிலைத் தாண்டி சைக்கிளில் செல்லும்போது நரைத்த தலைமுடியுடன் கிழவி ஒருத்தி அவர்களை வழிமறித்துகோயிலைத் திருடர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என முறையிட்டாள். அவர்களும் உடனே கோயிலுக்குள் சென்றுஅம்மனின் நகைகளைத் திருடிக்கொண்டிருந்த திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர். பின் திரும்பிவந்துகிழவியைத் தேடியபோது கிழவியைக் காணவில்லை. அம்மனின் சக்தியை அப்போது அவர்கள் உணர்ந்தார்கள்.
அபிராமி பட்டர் கதை போன்று வீரமகாகாளி அம்மன் கோயிலை பின்னணியில் வைத்து ஒரு கதையைத் தேவன் என்றயாழ்இந்துக் கல்லூரி ஆசிரியர் சிறுகதையொன்றை பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். அக்கதையில் சங்கிலி அரசன்காலத்தில் கோயிலில் பூசை செய்த பூசாரி மதுவுக்கு அடிமையாகவிருந்தார். ஆனால் தவறாது பூஜை நேரம்மட்டும்சுத்தமாக, பக்தியுடன் அம்மனுக்குப் பூஜைசெய்யத் தவறமாட்டார். பூஜை செய்யும் போது அவர் மனம் அம்மனுடன்லயித்துவிடும். அதன் பின் அம்மன் முன் இருந்து தியானம் செய்வார். பூசாரி குடிகாரனாக இருந்தாலும் அவரிடம் ஒருஅபூர்வ சக்தி இருந்தது. நோயாளிகள் பலர் அவரைத் தேடிவந்து பரிகாரம் கேட்பார்கள். பூஜைக்குப் பின் திருநீற்றைமந்திரித்து அவர்களின் உடம்பில் பூசி, பார்வை பார்த்து அவர்கள் வாயில் திருநீற்றைப் போடுவார். ஓரிரு நாட்களில்அவர்கள் சுகமடைந்துவிடுவார்கள்.
பூசாரி குடிப்பதைப் பற்றி அரசனிடம் பலர் முறையிட்டனர். அவரின் ஒழுக்கமின்மையைப் பற்றி அறிந்த அரசன்மந்திரியோடு பூசாரியைப் பரிசோதிக்க கோயிலுக்குச் சென்றார். அப்போது பூஜையும் தியானமும் முடிந்து அதன் பின்னர்பூசாரி; மது போதையில் இருந்ததைக் கண்டார் மன்னன். பேச முடியாது நா தளும்புவதையும் அவதானித்தார். அன்றுஅமாவாசை தினம். பூசாரியின் நிலையைப் பரிசோதிக்க “இன்று என்ன திதி என்று சொல்லமுடியுமா”? என்று அவரைப்பார்த்துக் கேட்டார் மன்னன்.
அன்று என்ன திதி என்பது அவருக்கு உடனே நினைவுக்கு வரவில்லை. அவரின் தாய் இறந்தது பொளர்ணமித் திதியில். அத்திதி உடனே நினைவுக்கு வர உடனே “இன்று பௌர்ணமித் திதி” என்றார். அவ்வளவுக்கு அவர் மது போதையில் இருந்தார்.அவரிடம் இருந்து மது வாசனை வீசியது.
“ஓகோ அப்படியா. சரியாகத் தான் சொல்கிறீரா,” என்று கேட்டார்; கோபத்தோடு; மன்னன்.
“ஆமாம் மன்னா” என்றார் பூஜாரி
“சரி இன்றிரவு நான் வருவேன். நீர் சொல்வது உண்மையானால் எனக்கு வானத்தில் பூரணசந்திரனைக் காட்டும். காட்டத்தவறினால் உமது தலை உருளும் “என்று ஆணையிட்டு விட்டு மன்னன் சென்றான்.
மன்னன் சென்ற பின் பூசாரி மது போதை தெளிந்து சுயநிலக்கு வந்தான். மன்னனுக்குத் தான் தவறான திதியைச்சொல்லிவிட்டேனே இன்று இரவு பூரணசந்திரனைக் காட்டாவிடில் தன் தலை போய் விடும் என் உணர்ந்தார். வேறுவழியில்லை வீரமகாகாளி அம்மன் சன்னதியில் ஓடிப்போய் தான் செய்த தவற்றைச் சொல்லி வாய்விட்டு அழுதார்.
“அம்மா என்னைக் காப்பாற்று. உனக்குத் தினமும் என் கடமை தவறாது சுத்தமாக பக்தியுடன் பூஜை செய்கிறேன். என்குடும்பப் பிரச்சனையால் மறு நேரங்களில் புத்தி தடுமாறுகிறேன். என்னைக் காப்பாற்று” என்று கதறி அழுதபடிமூர்ச்சையானார். இரவு வந்தது. அவர் எழும்பவில்லை. மன்னன் மந்திரி பரிவாரங்களுடன் கோயிலுக்கு வந்தார்.வானத்தில் பூரணச்சந்திரன் ஒளிமயமாக ஜொலிப்பதைக் கண்டு அதிசயப் பட்டார்.
” மந்திரி. இதெப்படி நடக்கும். இன்று அமாவாசையாயிற்றே. எங்கே பூஜாரி”? என்றார் மன்னன்.
“வாரும் மன்னா. அம்மன் சன்னதிக்குப் போவோம்” என்று மன்னனை அழைத்துச் சென்றார் மந்திரி. அங்குச் சன்னதியில்பூஜாரி சாஸ்டாங்கமாக அம்மன் முன்னே படுத்து இருப்பதைக் கண்டார். அம்மனின் கழுத்தில் இருந்த தாலியைக்காணவில்லை. புன்முறுவலுடன் அவள் தோற்றமளித்தாள். மன்னனுக்கு அம்மனின் திருவிளையாடல் புரிந்துவிட்டது.அம்மனின் தாலி தனக்கு பூரணசந்திரனாக காட்சி தந்ததை அவனால் உணர முடிந்தது. தன் பக்தனை அவள் காப்பாற்றிவிட்டாள் என நினைத்த போது மன்னன் உள்ளம் பக்தியால் பூரித்தது. இந்தக் கதைக்கும் அபிராமி பக்தர் கதைக்கும்தொடர்பிருந்தாலும், கதை அமைந்த சூழ்நிலை வீரமகாகாளி அம்மன் கோயிலுக்குப் பொருத்தமாகவிருந்தது. இன்றும்கோயில் பூசாரிகளில் சிலர் மதுவுக்கு அடிமையாகி வாழ்வதை அறியக் கூடியதாகவிருக்கிறது.
சைவ பூசாரிகளால் பூசைகள் செய்யப்பட்டன. அவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் கோயில் பரிபாலனம் சீரழிந்தது.அண்மையில் கிடைத்த செய்திகளின்படி கடந்த இரண்டு வருடங்களாகத் திருவிழாக்கள் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்டகோயிலினை புனருத்தனம் செய்து திரும்பவும் 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி திருவிழாக்கள் நடத்தபுனருத்தாரணக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்போது கொயில் சரிவர இயங்கி வருவதாகக் கேள்வி. 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book