24

Nallur2

மரபுக் கதை 19

 

செண்பகப்பெருமாள்

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லுர் பிரசித்தமான வரலாறு உள்ள கோவில். ஆரம்பத்தில் பூனகரி என்ற இடத்திறகு அருகாமையில் உள்ள நல்லார் கிராமத்தில் நல்லூர் முருகன் கோவில் கி.பி 940யில் உருவாக்கப் பட்டதாகவும் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயரப்பட்டாதாகவும் ஒருசாரரர் கருத்து. 1591 ஆம் ஆணடு யாழ்ப்பாணததை போத்துக்கேயர் கைப்பற்றி பல இந்துக் கோவில்களை அழிதனர். ஆதில் 1612ஆம் ஆண்டு, நல்லூர் முருகன்; கோவிலை இடித்துத் தரைமட்டமாக்கினர்.  பல தடவை கோவில் ஈடகப்பட்டு குருக்கள் வளவு, யமுனா ஏரி ஆகிய இடங்களில் இடம் பெயர்ந்து இறுதியாக ஒல்லாந்தரின் ஆட்சி காலத்தில் தற்பேர்து கொவில் உள்ள இடத்தில் அப்போது ஒல்லாந்தர் ஆட்சியின்போது சிறாப்பராக வேலை செய்த டொன் ஜுவான் மாப்பாண முதலியாரின் முயற்சியால் தற்போதைய இடத்தில் 1734 ஆம் ஆண்டு திரும்பவும் உருவாக்கப்பட்டது. நல்லூர் கோவில் பல தடவை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

நல்லூர் முருகன் கோயிலில் திருவிழாக்காலங்களில் கட்டியம் சொல்லும் போது “சிறீ சங்கபோதி புவனேகபாகு” என நினைவு கூறப்படுகிறது. யார் இந்த சிங்களப் பெயருடைய மன்னன்? இவனுக்கும் நல்லூருக்கும் என்ன தொடர்பு? என பலர் மனதில் வினா எழும்பலாம். வரலாற்றின்படி நல்லூர் மாநகரை அழித்து பின்னர் தான் செய்த பாவத்தை உணர்நது நல்லூரைப் புதுப்பித்து கோயிலைக் கட்டியவன் தான் யாழ்ப்பாண மன்னன் கனகசூரியனைப் போரில் வென்று கைப்பற்றிய “சப்புமல் குமாரயா” என்ற கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் சுவீகாரப் புத்திரன். பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த பணிக்கர் குடும்பத்தைச் சோந்தவன் சப்புமல் குமாரயா. உண்மைப் பெயர் செண்பகப் பெருமாள். செண்பகப் பூவின் மகன் என்பதைக் கருத்தாகக் கொண்டது. இந்து மதம் அவன் பிறந்தமதம். வளர்ந்த மதம் பௌத்தம். தமிழ் அவன் பிறந்த மொழி. ஆனால் வளரும் போது கற்ற மொழி சிங்களம்.

விஜயநகர மன்னன் இரண்டாம் கிருஷ்ணதேவர் (1422 – 1446.) இலங்கைமேல் படையெடுத்த போது தோல்வியைத் தழுவினான். அவன் திரும்பவும் இந்தியா திரும்பும் போது யாழ்ப்பாணத்தில் ஒரு படையை நிலைநிறுத்திச் சென்றான். அவனக்குப்பின் மன்னனான மலிக்கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டு பிரச்சனையால் விஜயநகர இந்து சாம்ராஜய்ம் வலு இழந்தது. அச்சமயம் இலங்கையில் கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரபாகு மன்னனுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலவீனம் உதவியாக இருந்தது. இனியும் அவர்கள் இலங்கைமேல் போர் தொடுக்க மாட்டார்கள் என அறிந்த கோட்டை மன்னன் பராக்கிரமபாகு தன் ஆட்சியை விஸ்தரிக்கத் தொடங்கினான். நாட்டின் பெரும் பாகம் அவனது ஆட்சியின் கீழ வந்தது. ஆனாலும் சில பகுதிகள் அவனுக்கு திறை செலுத்தாமல் தலையிடியைக் கொடுத்தது. அக்காலத்தில் கைதேர்ந்த போர்வீரர்களை சேர நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பகைவருடன் போர் தொடுக்கும் வழமை இருந்து வந்தது. அவ்வாறு வந்தவர்களே வன்னியர்கள். யாழ்ப்பாண அரசை குணவீர சிங்கை ஆரியன் பரராசசேகரன் ஆட்சிசெய்தான். இவன் 1440ல் இறக்க இவன் மகன்; கனக சூரியன் சிங்கை ஆரியன் செகராஜசேகரன் அரசனான்.

கோட்டை அரசன் பராக்கிராமபாகுவிற்கு யாழ்ப்பாண அரசின் மேல் ஒரு கண் எப்போதும் இருந்து வந்தது. கேரளாவில் இருந்து வந்த போர்வீரர்களில் பணிக்கன் என்பான் மன்னனின் அபிமானத்துக்கு ஆளானான்; இவனது தேகவலிமையும் வாட்போர் திறனும் மன்னனை திகைக்கவைத்தது. களரிபத்து கலை கேரளாவில் பிரபல்யமான காலமது. கேரள வீரர்கள் பலர் அதில் தேர்ச்சிபெற்றவர்கள், தமிழ் பேசும் இந்து சமய வாதிகள்.; அப் பணிக்கனை தன் மெய் காப்பாளனாக்கி தனது சிங்கள குலப்பெண்னொருத்தியை மணம் முடித்து வைத்தான் மன்னன். இப்பணிக்கன் தம்பதிகளுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். அதில் மூத்தவனுக்கு “செண்பகப் பெருமாள்” எனவும் இரண்டாமவனுக்கு “ஜெயவீரன்” எனவும் பெயர் சூட்டினர் ஆனால் மன்னனோ அவர்களை சுவீகாரம் எடுத்து அவர்களுக்கு முறையே “சப்புமல்குமாரயா”, “அம்புலகலகுமாரயா” என்ற சிங்களப் பெயர்களை சூட்டினான். குமாரயா என்பது மகனைக் குறிக்கும். சப்புமல் என்பது செண்பக மலரினைக் குறிக்கும். தாய் சிங்களத்தி, தகப்பன் தமிழன் என்ற படியால் தமிழ், சிஙகளப் பெயர்களுடன் இரு ஆண்குழந்தைகளும் வளர்ந்தார்கள். தகப்பன் உடலில் ஓடிய வீர இரத்தம் பிள்ளைகளிலும் ஓடியது போலும். பணிக்கனின் புத்திரர் இருவரும் தேகவலிமையிலும், போர்க்கலையிலும் வல்லுனரானார்கள். தந்தையின் பயிற்சியினால் அவர்களின் வீரம் பிரகாசித்தது. பராக்கிரமபாகுவிற்கு ஆண் பிள்ளைகள் இல்லாத காரணத்தால் இவ்விருவர் மீதும் அளவு கடந்த அன்பைச் சொரிந்தான். தனக்கு பின் சப்புமல் குமாரயா ஆட்சியேற்பான் என்ற எண்ணத்தைச் சுவீகாரப் புத்திரன் மனதில் உருவாக்கினாhன். ஆனால் விதி வேறு விதமாக விளையாடிவிட்டது. பராக்கிரமபாகுவின் புத்திரி உலகுடையதேவிக்கு ஜெயவீரன் என்ற ஒரு மகன் பிறந்தான். அது மன்னனின் எண்ணத்தை மாற்றிவிட்டது. தன் இரத்த தொடர்புள்ள தனது புத்திரியின் மகனை அரசானாக்கும் எண்ணம் அவன் மனதில் வளரத் தொடங்கியது. தனது சுவீகாரப் புத்திரனான சப்புமல் குமாரயா இராச்சியத்துக்கு வந்தால் தன் பேரப்பிள்ளைக்கு அரசபதவிகிட்டாதென யோசிக்கத் தொடங்கி, அவர்களை ஒழித்துத் தட்ட திட்டம் தீடடினான்.

வன்னியில் சிற்றரசர்கள தனக்கு கீழ்படியாது கலவரம் செய்கிறார்கள் எனக்கூறி சப்புமல்குமாரயாவை அழைத்து அவர்களை அடக்கி வரும்படி ஒரு படையுடன் அனுப்பினான். அதே சமயம் சப்புமல் குமாரயாவின் தம்பி ஜெயவீரனை கண்டியரசனை வென்று வரும்படி படையுடன் இன்னொரு திக்கில் அனுப்பினான். இருவர்களும் போரில் இறப்பார்கள் என அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வன்னி சென்ற சப்புமல் குமாரயா வன்னியரை வென்று திறையுடன் மீண்டான். இவ்வெற்றியால் மகிழ்ந்த பராக்கிரமபாகு யாழ்பாண இராச்சியத்தை வென்று வரும்படி செணபகப்பெருமாளை படையுடன் அனுப்பினான். யாழ்ப்பாண இராச்சியம் வெகு தூரத்தில் இருந்தபடியால் இந்த முறை இவன் போரில் இறப்பது நிட்சயம் என மன்னன் நினைத்தான். படையுடன் பூநகரி ஊடாக யாழ்குடாநாட்டை அடைந்த செணபகப்பெருமாள் அரண்களையும் துறைமுகங்களையும் கைப்பற்றினான். அவனோடு கேரள வீரர்களும் சிங்கள வீரர்களும் சென்றனர். கொண்டைக்காரத் தமிழர், பணிக்கர், வடக்கர் கொண்ட கனகசூரியனின் பெரும்படை செண்பகப்பெருமாளின் படையோடு மோதியது.  செண்பகப்பெருமாளின் வீரத்துக்கு ஈடு கொடுக்கமுடியாது கனகசூரியன் படை பின்வாங்கிற்று. தனது படைக்கு உற்சாகம் கொடுத்தவாறே எதிரியின்; படையினரைத் துவம்சம் செய்தான் செண்பகப் பெருமாள். எதிரிகளின் படை புறங்கொடுத்து ஓடியது. கனகசூரியன் தன் குடும்பத்தோடு இந்தியாவுக்கு ஓடி, திருக்கோவலூரில் அபயம் புகுந்தான். ஒரு தமிழ் மறவன் இன்னொரு தமிழர் படைக்கு எதிராக புரிந்த போராக அது சரித்திர ஏடுகளில் பொறிக்கப்பட்டாலும் “கோகில சந்தேச” வென்ற சிங்கள நூல் செண்பகப் பெருமாளை சப்புமல் குமாரயா என்ற சிங்கள வீரனாக சித்தரித்து கவிபாடியது. யாழ்ப்பாணத் தலை நகருக்குள் புகுந்து மதங்கொண்ட யானையைப் போல் மாடமாளிகைகளை இடித்து தரைமட்டமாக்கினான். பின்னர் பல அதிகாரிகளை சிறைப்பிடித்து கோட்டை நகருக்கு மீண்டான். செண்பகப்பெருமாள் கிபி1450 முதல் கிபி 1467 வரை 17 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.

சென்றவிடமெல்லாம் வெற்றிவாகை சூடி திரும்பிய செண்பகப்பெருமாளுக்கு “ஆரிய வேட்டை ஆடும் பெருமாள்” என நாமம் சுட்டி யாழ்ப்பாணத்தை அரசு புரிய அனுப்பினான் பராக்கிரமபாகு. கோட்டையில் செண்பகப் பெருமாள் இருந்தால் தன் பேரன் அரசனாக முடியாது என்பது அரசனுக்குத் தெரியும். காரணம் வீரர்கள் செண்பகப்பெருமாளுக்கு ஆதரவாக இருந்ததே. மன்னனின் கபடசிந்தனையை புரியாது செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் திரும்பி நகரை புனருத்தாரணம் செய்தான். கோட்டை மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்ற இவனை அனுப்பிய போது முத்திரைசந்தைக்கு அருகாமையில் உள்ள நகரமும் குருக்கள் வளவில் இருந்த முருகன் கோயிலும் அவனால் சிதைக்கப்பட்டது. மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பாமல், கோயில் அழிந்து போன இடத்தில் கட்டாது திரும்பவும் புது இடத்தில் முருகன் கோயிலும் நகரமும் அமைத்து ஸ்ரீசங்கபோதி புவேனக்கபாகு என்றபெயரில் ஆட்சிபுரிந்தான்.

யாழ்பாணத்தில் நல்லூரில் கந்தசாமி கோயிலை அமைத்த பெருமை புவேனக்கபாகு என்ற செண்பகப்பெருமாளைச் சாரும். அரண்மனை, அரசமாளிகைகள் என்பன அமைந்த பண்டாரவளவு, சங்கிலித் தோப்பு (இது பின் வந்த பெயர்) ஆகிய இடங்களுக்கு அருகே, இன்று முத்திரைச்சந்தையிலிருந்து செம்மணிக்குப் போகும் பாதையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் கோயில் அமைத்தான். இன்றும் நல்லூர் கோயில் கட்டியதற்காக ஸ்ரீசங்கபோதி புவேனக்கபாகு என அவன் புகழ்பாடப்படுகிறது என்பது பௌத்தர்களின் விளக்கம். இங்கு ஸ்ரீ சங்கபோதி என்ற சொல் பௌத்தமதத்தில் பாவிக்கப்படும் சொல் என்பது அவர்கள் வாதம். சப்புமால் குமாரயா சைவசமயவாதியாக இருந்தும் புத்தசமயத்தையும் பரிபாலித்து வந்ததோடு இரு சமயத்தினரையும் சமரச நிலையில் பாவித்து வந்தான். அக்காலத்தில் இவன் தமிழ் சிங்களம், சமஸ்கிருத மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று நிபுணர்கள்.

மாவிட்டபுரம் கோயில் ஆதீனப் பிராமணர் ஒருவர் இவ்வரசனுக்கு விருந்தளித்ததாகவும்; அவ்விருந்தைப் புகழ்ந்து தமிழில் மன்னன் வெண்பா ஒன்று பாடியதாகவும் ஐதீகம் உண்டு.

பராக்கிரமபாகு தான் இறக்குமுன் தன் பேரன் ஜெயவீரனுக்கு கோட்டை அரசனாக முடிசுpட்டினான். பாரக்கிரமபாகு இறந்தபின்னர், அதைக் கேள்விப்பட்ட செண்பகப்பெருமாள் எனும் புவனேகபாகு யாழ்ப்பாணம் விட்டு கோட்டைக்குச் சென்று, ஜெயவீரனைக் கொன்று, கோட்டை இராச்சியத்துக்கு அரசனானான். கோட்டைக்கு செண்பகப் பெருமாள் அரசனான போது யாழ்ப்பாணத்துக்கு விஜயவாகு என்ற சிங்கள வீரன் ஒருவனை அரசானாக நியமித்தான். அதனையறிந்த கனகசூரியன் தனது புத்திரர்களுடனும் சேனையுடனும்; திரும்பவும் யாழ்ப்பாணம் வந்து விஜயபாகுவை போரில் தோற்கடித்து யாழ்ப்பாண ஆட்சியை கைப்பற்றினான். நல்லூர் நகரைப் புதுப்பித்தான். செண்பகப்பெருமாள் வெற்றி கொண்ட போது அழிக்கப்பட்ட தமிழ் சங்கத்தை திரும்பவும் நிறுவினான்.

ஆய்வு நூல்: யாழ்ப்பாணச் சரித்திரம் – முதலியார் செ இராசநாயகம்

                                                         ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book