23

Maruthapiravalli

மரபுக் கதை 18

 

 மாருதப்புரவீகவல்லி

மாவிட்டபுரம் முருகன் கோவில் தோன்றிய வரலாறு சோழ இளவரசியான மாருதப்புரவீகவல்லியோடு தொடர்புடையது. இக்கோயில் கீரிமலைக்கு அருகே உள்ளது. மாவிட்டபுரம் என்பது குதிரை முகம் நீங்கிய இடம் என்பதாகும். இவ்விடத்துக்கு இப்பெயர் வரமுன்னம்; கோயிற்கடவை என்ற பெயர் இருந்தது. இதோடு இடப்யெர் தொடர்புடைய மரபு வழி வந்தக் கதை பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீரிமைலை புனித நீர் ஊற்றுத் தலமாக கருதப்படுகிறது. மாவிட்டபுர முருகன் கீரிமலைக்கு தீர்தமாடச் செல்வது வழக்கம். இது ஆடி அமாவாசை தினமன்று இடம் பெறும். ஒரு காலத்தில் அப்பகுதயிலி கீரிகள் அதிகமாக இருந்ததினால் கீரிமலை என்ந பெயர் வந்ததென்பர். இவ்விடத்தில் நகுல முனிவர் குகையில் இருந்து, தியானம் செய்து கீரி முகம் மாறப் பெற்றார் என்ற மரபுக் கதையுண்டு.

ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இவ்விடத்தில் அமைந்துள்ளது. இராமர் இராவணனுடன் போர் புரிந். கீரிமலையில் தீர்த்தமாடி சென்றார் என்ற மரபு வழி வந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் மேரு மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா எனும் முனிவரது தவத்திற்கு யமத்கினி என்ற வேடன் இடையூறு செயததனால் முனிவரின் சாபத்துக்கு ஆளாகி கீரிமுகம் பெற்றதாகவும, அவ்வேடன கீரிமலைக்கு வந்து தீர்hத்தமாடி கீரிமுகம் நீங்கப்                                   பெற்றதாகவும்   அதனால் நகுலகதி என பெயர் பெறதாகவும் மருபுவழிக்; கதையுண்டு. கீரிமலைக்கு கண்டகி என்ற பெயரும் ஒரு காலத்தில் இருந்தது.

சோழ மண்டலத்தை ஆண்ட திசையுக்கிரசிங்க மன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லி.

கி.பி 9-ஆம் நூற்றாணடில் வாழந்த உக்கிரசிங்கன் என்ற மன்னன் குதிiமுகம் நீங்கி அழகியத் தோற்றத்;தோடு இருந்த மாருதப்புரவீகவல்லி பற்றி அறிந்தான். அவளை சந்தித்து அவள் மேல் காதல் கொண்டான். தான் உக்கிரசிங்கனை மணம் முடிக்க வேண்டுமாகில் முருகன் கோவில் ஒன்றினைக் கட்ட சம்மதிக்க வேண்டும் என்றாள். அவளது வேண்டுகோளின்படி மன்னனும் சம்மதம் தெரிவித்தான். இடங்களில் மாவிட்டபுரம் முதலாகத் தென் திசைகளில் ஐந்து முருகன் கோவில்களை ஸ்தாபித்தாள். மாருதப்புரவீரகவல்லி முருகன் விக்கிரகத்தை தென் இந்தியாவில் இருந்து தன் தந்தை மூலம் வரவழைத்தாள்.; காங்கேயன் (முருகன்) விக்கிரகம் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய துறைமுகம் காங்கேசன் துறையாயிற்று. அத் துறைமுகம் மாலிட்டபுரத்துக்கு வடக்கே இரு மைல் தூரத்தில் உள்ள ஊராகும்.

 இளவரசி மாருதப்புரவீகவல்லி கூனல் தோற்றமுள்ள முனிவர் ஒருவரைக் கிண்டல் செய்ததினால் அவர் கொடுத்த சாபத்தால்; குதிரை முகமும் குஷ்ட ரோகமும் அவளைப் பீடித்துக்கொண்டது, பல சிகிச்சைகள் செய்தும் அவளுக்கு நோய் மாறவில்லை. அவள் தரிசிக்காத கோவில்கள் இல்லை. அவளது நோய் தீராததைக் கண்டு, தவசி ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையில் உள்ள கீரிமலை என்ற திவ்விய தீhத்தத்தில் நீராடச்; சென்றாள். அவளுக்குத் துணையாகச் செவிலித்தாய், பணிப்பெணகள் போர்வீரர்களும்; சென்றார்கள். அவர்கள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” எனவும்> அவள் குளித்த கிணறு இருந்த இடம் வல்லிக் கிணற்றடி என இடப்பெயர்களுடையன. இவ்விடங்கள் மாவிட்டபுரத்து அருகே உள்ளதாக பேராசரியர் இ. பாலசுநதராம அவர்கள்; தனது “ஈழத்து இடப் பெயர்” ஆய்வு என்ற நூலில் குறிப்பிட்டுள்hர்.

 மாருதப்புரவீகவல்லியை மணந்த உக்கிரசிங்கனே தொண்டமான் என்ற தளபதி, உப்பு வணிகம் செய்வதற்கும், உப்பை ஏற்றுமதிசெய்ய பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல கால்வாய் ஒன்றை வெட்ட துணைபரிந்ததாக மரபு வழிக் கதை சொல்கிறது. இக்கால்வாயே தொண்டமனாறு என்ற பெயாரில் இன்று அழைக்ப்படுகிறது.

மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் பிறர், பார்வைக்கு நீங்கினாலும் அவளது சொந்த பார்வையிலிருந்தும் நினைவில் இருந்தும் நீங்கப் பெறவில்லை. அதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது முருகன் வழிபாடடுக்கு முதல் பிள்ளையாருக்கு வழிபாடு செய்யாததே காரணம் எனத் தெரியவந்தது. தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஏழு இடங்களில பிள்ளையாருக்கு கோவில் அமைத்து மாருதப்புரவீகவல்ல வழிபட்டாள். கொல்லங்கலட்டி, வரத்தலம, ஆலங்கொலலை, கும்பழாவளை, பெருமாக்கடவை. ஆலங்குழாய், கல்வளை என்பனவே அப்பிள்ளையார் தலங்கலாகும் பிள்ளையாருக்குக் கோவில் அமைத்து வழிபட்ட பின் இளவரசியின் குதிரைமுகம் அவளது பார்வைக்கு முற்றாக நீங்கியது என்கிறது மரபு வழி வந்த கதை.

                                                            ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book