18

 Talawilla churchdownload

மரபுக் கதை 13

 

தலவில்லு தேவாலயம்

 

இலங்கையில் கொழும்பில் இருந்து வடக்கே போகும் வழியில் புத்தளம் நகரை அடையமுன், பாலாவி என்ற இடத்தில் இருந்து கற்பிட்டி என்ற ஊரைச் நோக்கிச் செல்கிறது. இந்த பாதை கற்பிட்டி குடாநாட்டில் அமைந்துள்ளது. பாலாவியில் இருந்து கற்பிட்டிக்கு 25 கி.மீ தூரம். கற்பிட்டியை அடைய முன், பாலக்குடா என்ற ஊரில் இருந்து   ஒரு பாதை இந்து சமுத்திரத்தின் கரையை நோக்கிச் சென்று தலவில்லு என்ற கரையோரக் கிராமத்தை அடைகிறது. பாலக்குடாவில் இருந்து 6 கிமீ தூரத்தில் தலைவில்லு செயின்ட் ஆன்ஸ், தேவாலயம் அமைந்துள்ளது. செயினட் ஆன், யேசுநாதரின் தாயார் மேரியின் அன்னை.  திருமணமாகத பெண்கள், மரப்பெட்டிகள் செய்யும் தொழிலாளிகள், குதிரையில் பயணம் செய்வோர், பிரசவ வேதனையால் தவிக்கும் பெண்கள் ஆகியோருக்குக் காவல் தெய்வமாகும். ஒரு காலத்தில் தேவாலயத்தைச் சுற்றி ஓரே மணல் திடல். சில பனைமரங்களை அங்கு காணலாம். ஆனால் இப்போது தேவாலயத்தைச் சுற்றி பல வீடுகள் தோன்றிவிட்டன. தலைவில்லுவைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் தமிழ் பெயர்களைக் கொண்டவை. கரையோரமாகத் தெற்கு நோக்கிப் போனால் “உடப்பு” என்ற தமிழர் பெரும்பான்மையாக வாழும் ஊரை அடையலாம். வில்லு என்றால் குளத்தைக் குறிககும். வில்லு என்று முடிவடையும் பல ஊர்ப்பெயர்களுண்டு. தலவில்லு என்ற பெயரும் அதுபோன்று மருவியபெயராகும்.

செயின்ட் ஆனின் தேவாலயம் தோன்றுவதற்கு இரு மரபு வழிக்கதைகள் உண்டு. கி.பி பதினோராம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர், கண்டி இராச்சிய்தைத் தவிர மற்றைய மாகாணங்களை ஆட்சி புரிந்த காலம். ஒரு ஏழை போர்த்துக்கேயன் மன்னாரில் இருநது மேற்கு கரையோரமாக கொழும்புக்கு தொழில் தெடிப் போகும் வழியில், களைப்பால் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் தூங்கிவிட்டான். இந்த மரம் அப்போது இருந்தது தற்போது தேவாலயம் இருக்கும் இடத்தில். அவன் தூஙகும் போது கனவில். மெழுகுவர்த்திகள் இரு பக்கங்களிலும் எரிந்தவண்ணம் காடசி தரும் ஒரு சிலையைக் கண்டான். தூக்கத்தை விட்டு எழும்பிய போது நிஜமாகவே கனவில் கண்ட சிலை மரத்தின் கீழ் இருப்பதைக் கண்டான் அந்த வழிப்போக்கன். அச்சிலை செயின்ட் ஆனினது என்பதை உணர்ந்தான். கனவில் தனக்கு மரத்தடியில் தேவாலயம் ஒன்றறை அமைக்கும் படி செயினட் ஆன் வழிப்போக்கனிடம் வேண்டினாள். செயின்ட் ஆன் கேட்டுக்கொண்டபடி தான் தூங்கிய மரத்தடியில் ஒரு சிறு கோவிலை அமைத்தான். தற்போது தேவாலயத்தில் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் செயின்ட் ஆனின் சிலையானது போர்த்துகேய வழிப்போக்கன் கனவில் கண்ட சிலையைப் போன்றது.

செயின்ட் ஆன் தேவாலயத்தைப் பற்றி இன்னொரு மரபு வழி வந்த கதையும்உண்டு. அக்காலத்தில் கிராமங்களில் வாழ்பவர்கள் காட்டுப் பொருட்களான தேன், மெழுகு, யானைத் தந்தம், மான்தோல், கருங்காலி மரம் ஆகியவற்றை தலவில்லு வழியே கப்பலில் போகும் வணிகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்தனர். அவ்வாறு பொருட்களை விற்க போகும் நேரம் ஒரு சமயம் வணிகக் கப்பல் ஒன்று சிதைந்த நிலையில் கடலோரமாக இருப்பதைக் கண்டார்கள். கப்பலில் இருந்து தம்மை உயிரோடு பாதுகாத்தது செயின்ட் ஆன் என்ற தெய்வமெனக் கருதினார்கள். கடலோரத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் பொந்தில் செயினட் ஆன் தெய்வத்தின் சிலையை வைத்து வணங்கி நன்றி தெரிவித்தார்கள்.  அவ்விடத்தை விட்டுப் போகமுன், கப்பலின் கப்டன் தாங்கள் போகும் வியாபாராம் நல்லாய் நடந்தால் திரும்பிவந்து சிலைவைத்த ஆலமரத்தடியில் செயினட் ஆனுக்கு தேவாலயம் கட்டி, அந்தச் சிலையை வைத்து வணங்குவதாகச் சபதம் எடுத்துப் போனான். சிதைந்த கப்பலை அப்படியே விட்டு விட்டு அவர்கள்    வியாபாரம் செய்யும்      காலி  நகரை நோக்கித் தங்கள்    பயணத்தைத் தொடர்ந்தார்கள். தலவில்லுவுக்கு அருகே உள்ள கட்டைக்காடு கிராமத்தில் வாழும் மீனவர்கள்தங்கள் பொருட்களை வழமைபோல் கப்பலில் போகும் வணிகர்களுக்கு விற்கபோகும் போது சிதைந்த கப்பல் கரைதட்டி நிற்பதைக் கண்டார்கள். கப்பலைச் சிதைந்தநிலையில் கண்ட   அவர்கள் அவ்விடத்துக்கு “கப்பலடி” என்றுபெயரிட்டனர். அப்பெயர் இன்றும் நிலவி வருகிறது. அம்மீனவர்கள் ஆலமரத்தடியில் தெய்வத்தின் சிலை இருப்பதைக் கண்டு வணங்கத் தொடங்கினர். கேட்டதைக் கொடுக்கும் தெயவம் என்ற நம்பிக்கையோடு ஊர் மக்கள் வழிபடச் செய்தார்கள். இந்த சமயம் காலிக்குச் சென்ற வணிகனின் வியாபாரம் நன்றாக வளர்ச்சி அடைந்து அவனுக்குப் பெரும்; செல்வம் கிடைத்தது. தனது வாக்கு படி சிலை வைத்து சென்ற ஆலமரத்தடிக்கு திரும்பிப்போய்> சிலைக்கு தேவாலயம் ஒன்றினை அமைத்தான். வருடா வருடம் தேவாலயத்துக்குப் புனித யாத்திரையை அவ்வணிகன் மேற்கொண்டான். ஆலமரத்தடிக்கருகே நல்ல தண்ணீர்க் குளம் இருந்தது. தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின தாகம் தீர்க்க அக்குளத்தின் நீர் பாவிக்பட்டது. நளடைவில் அவ்pடத்தில் “புனித கிணறு” என்ற பெயரோடு கிணறு ஒன்று தோன்றியது.

1943ஆம் ஆண்டளவில், சிலைக்கு தேவாலயம் அமைத்து வழிபட்ட காலத்திலிருந்து, நூறு வருடங்களுக்குப் பின் சிதைந்த கப்பலின் மேலோட்டைக் கண்ட ஊர் மக்கள் கொவிலில் கப்பலின் மேலோட்; டை தேவாலயத்தை உருவாக்கிய வணிகர் நினைவாக வைத்தனர். 1837 இல் தேவாலயத்தைப் புதிப்பிக்க அத்திவாரமிடப்பட்டு 1843ஆம் ஆண்டில் தேவாலயத்தின் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்கள். செயினட் ஆன் தேவாலயத்தின் மகிமையறிந்து வெகு தூரத்தில் வசித்த கத்தோலிகர்கள்> சிரமம் பாராது தேவாலயத்துக்கு யாத்திரை போய் வந்தனர். அக்காலத்தில சிலாபத்தில் இருந்து தெவாலயத்துக்கு மாட்டு வண்டிலில் போய் சேர குறைந்தது மூன்று நாட்கள் எடுத்தன. இப்போது சிலபாத்தில் இருந்து காரில் இரண்டு மணித்தியாலப் பயணம். வன்னியில் உள்ள கன்னி மேரியின் மடு தேவாலயத்தைப் போல் தலவில்லு செயினட் ஆன் தேவாலயமும் இலங்கை வாழ் கத்ததேலிக்கர்களிடையே பிரசித்தம் பெற்ற தேவலாயமாகும்.

       ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book