6

Mankumban         

      மரபுக் கதை 1

மரபு வழி வந்த் கதைப் தொகுபில்;” முதலாவதாக வருவது யாழ் குடா நாட்டில் உள்ள வேலணைப் பள்ளிவாசல். வேல் + அணை = வேலணையாகியது என்பர். அதனால் இந்து மதத்துக்கு இங்கு தொடர்புண்டு. ஒரு காலத்தில் பண்ணைப் பாலம் வருமுன் வேலணைத் தீவாக இருந்து, பாலம் வந்து தீவு என்ற சொல்லை விழுங்கி விட்டது. கமத்திற்கு சிறப்பான கிராமம் இது. இங்கு பெரும்பானமையாக வாழ்பவாகள் இந்துக்கள். யாழ்நகரில் இருந்து வெகு தூரத்தில் இல்லை.

இந்து மதம் செழித்த வளர்ந்த இடத்தில் எவ்வாறு பள்ளிவாசல் வந்தது? போர்த்துக்கேயரைப்போல் அங்கு முஸ்லீம்கள் வந்து ஆக்கிரமித்து கோயில் கட்டவில்லையே? அது தான் கதையின் வித்து. யாழப்பாண வாவிக்; கரை ஓரத்தில் இருந்து  வெகு அன்மையில், மண்கும்பான் என்ற இடத்தில் அற்புதங்கள் நடக்கும் பள்ளிவாசல் ஒன்று மரச்சோலைக் கிடையே அமைந்தள்ளது. அற்புதங்கள் என்றவுடன் அதை அங்கிருந்த அகற்ற இந்துக்களும் தயங்குவர். சனங்களும் அங்கு கூட்டமாகப் போவதினால் ஊரின் பெயரும் பிரசித்தமடையும்.

தென்னிந்தியாவிலிருநது மலபார், கீழக்கரை, வேதார்ணியம் போன்ற கரையோர ஊர்களிலிருந்து இலங்கைக்கு முஸ்லீங்கள் வந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு காலத்தில் இன்றைய கந்தசாமி கோயிலிருந்த இடத்தில் முஸ்லீம்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அந்தக் காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்து மதத்திலிருந்து முஸ்லீம் மதத்துக்கு மதம்மாறிய “கந்தசாய்பு” என்ற வம்சத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கமாக சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், உசன், எழுதுமட்டுவாள் போன்ற ஊர்களில் குடியேறினர். சிலகாலத்தின் பின் அங்கிருந்து வியாபாரம் செய்ய வசதிப் படாமையால் இப்போது நல்லூர் கந்தசாமி கோயிலிருக்கும் மேல் மேல் பகுதியான குருக்கள் வளவுக்கு குடியேறி அங்கு மசூதி ஒன்று கட்டியதாக பழம் நூல்கள் கூறுகின்றன அப்படி வந்தவர்கள் யாழ்ப்பணக் குடா நாட்டில் உசன் என்ற பகுதியில் குடியேறி, பி ன்னர் நல்லூரில் உள்ள குருக்கள் வளவுக்கு குடி பெயர்ந்தனர். நல்லூர் முருகன் கோவில் கட்டுவதகாக அவர்கள் சோனகத் தெருப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இது வரலாறு.

நல்லூர் மூலஸ்தானத்து அருகே ஒரு முஸ்லீம் சித்தர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டதாயும், அக்காரணத்தால் முஸ்லீம்கள் அவரை அடக்கம் செய்த இடத்தைத் தரிசித்து வர ஒரு வாசல் கோயிலுக்குள் போக தோற்றுவிக்கப்பட்டது. அதுவல்லாமல் அவர்கள் முதலில் வசத்த இடததை விட்டு அகன்று சோனக தெருவுக்கு இடம் பெயர்ந்ததினால் கோயில் வாசலில் முஸ்லீமகள் கற்பூரம் விற்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது.

வெகு காலத்துக்கு (எந்தக் காலம், ஆண்டு என்று கேட்க வேண்டாம்) முன்பு, ஒரு நாள் ஒரு விவசாயி தனது நிலத்துக்கு உரமாக காய்ந்த இலைகளைத் புதைக்கப் போனபோது அவன் வைத்திருந்த மண்வெட்டி “டொங்” என்ற சத்தத்துடன் மண்ணுக்குள் இருந்த ஒரு பொருளுடன் மோதியது. ஏதோ புதையலாக்கும் என்று எண்ணி அவன் பார்த்த போது அழகிய பிரேதம் ஒன்று இருப்பதைக் கண்டான். வெகு காலமாக புதைந்து கிடந்த பிரேதத்தில் இருந்து மண்வெட்டி வெட்டி இரத்தம் வரத் தொடங்கியது. அது தான் கதையில் வரும் அதிசயம். பேயோ பிசாசோ என்ற பயந்து, அவன் மண்ணை மூடிவிட்டு வீட்டுக்குப் ஓடிப் போய்விட்டான் ஒருவருக்கும் நடந்ததை சொல்லவில்லை. அது புதையலாக இருந்திருந்தால் கதை வேறு. இரவும் வந்தது. அவனுக்கு தான கண்ட பிரேதத்தின் நினைவு தூக்கததை கொடுக்கவில்லை. அது நடந்த இடம் அவன் வீட்டிலிருந்து வெகுதாரத்தில் இல்லை. நடந்ததை நினைத்தபடி தூங்கிவிட்டான்; கனவில் அந்த அழகிய பிரேதம் வந்தது. தான் அபூபக்கர் என்ற ஞானி ஒருவரின் பிரேதம் எனவும். அந்தப் புனிதமான இடத்தில் பள்ளிவாசல் கட்டும் படி யாழ்ப்பாணத்தில் உள்ள லெப்பை என்பவரிடம் போய் முழுக் கதையையும் சொல்லும் படி சொல்லிற்று. லெப்பையின் விலாசத்தை நிட்சயமாக கொடுத்திருக்கலாம். லெப்பையின் கனவிலும் பிரேதம் தொன்றயதோ தெரியாது. லெப்பையைத் தேடி யாழ்ப்பாணம் போனார் விவசாயி; அவர் இருந்தயிடம் யாழ்ப்பாணம் சோனகத் தெருவா என்பது கதையில் சொல்லப் படவில்லை. ஞானியின் பிரேதம் கண்டு பிடிக்கபட்ட இடத்தில் பள்ளிவாசல் லெப்பையால் கட்டப்பட்டது. விவசாயி முஸ்லீமாக மாறினாரா என்பது தெரியாது. இந்த அதிசயத்தை அறிந்த இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் எல்லொரும் அங்கு சென்றார்கள். ஞானிக்கு எல்லா மதமும் சம்மதமே! ஞானியின் கல்லறையானது நீண்டது. ஆகவே அந்த ஞானி உயரமானவர் என்பது பலர் கருத்து. பள்ளிவாசலுக்கு அருகே உள்ள கிணற்றுத் தண்ணீர் கடற்கரைக்கு அருகே இருந்தாலும் உப்பு உவர்ப்பு இல்லாத நன்னீராக இருந்தது இரண்டாவது அதிசயம். ஆகவே நோய்களை தீர்க்க வல்லது என அங்கு தரிசிக்க வந்தவர்கள் நம்பினர். அங்கு வரும் பக்தர்கள் சில நாட்கள் தங்கிச் செல்வார்கள். ஆனால் பள்ளிவாசலை இடிந்து விழாமல் காப்பாற்ற வேண்டும் என்று ஒருவரும் சிந்திக்கவில்லை. பள்ளிவாசலுக்கான ஏணியும் கதவும் ஒரு நாள் கடற்கரை ஓரத்தில் இருக்க கண்டுபிடிக்கப்பட்டது. அப்பள்ளிவாசலை பாதுகாக்க காப்பாளர்கள் இல்லை. அங்கிருநதது தென்னை மரங்கள்களில் தேங்காய் திருடினால் கண்கள் தெரியாமல் போய் கீழே விழ நேரிடும் என்பது உப கதை. அதோடு மட்டுமல்ல பள்ளிவாசலைக் காவல் செய்யும் நாகங்களால் தீண்டப்படுவர் என்பது மற்றொரு உபகதை. இது போன்ற கதைக்கும் நல்லூர் கோயிலினுள் உள்ள முஸ்லீம் ஞானி ஒருவரின் சமாதிக்கும் தொடர்புண்டா எனக் கேட்கவேண்டாம். அது இன்னொரு கதையாகும். ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம். பள்ளிவாசல் பாழடைந்த நிலையில் அங்கு இன்னும் இருக்கிறது. புலம் பெயர்ந்து சென்ற யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் திரும்பி வந்தால் சில சமயம் பள்ளிவாசலைப் புதுப்பிக்கலாம். யார் கண்டது.? நல்ல காலம் பள்ளி வாசல் நினைவாக “பள்ளிவாசல் அணை” அல்லது “பள்ளிவாசல் கரை” என்றப் புதுப்பெயர் இன்னும் அவ்விடத்துக்கு சூட்டப்படவில்லை. இன்று இவ்விடத்தில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு அன்னதானம் கொடுக்கப்படுகிறது.

                           ♣♣♣♣♣

 

                  

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book