5

writers pen

மரபுக் கதைகள் கேட்பதில் பலருக்கு விருப்பம் அதிகம். அதுவும்; பாட்டி, பாட்டன், கதை சொல்லும் போது ஏதோ நேரில் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் கேள்விகள் கேட்டால் அதற்கு சாக்குப் போக்குச் சொல்லி “இக் கதை எனக்கு என் அம்மா சொன்ன கதை” என்று சொல்லி மழுப்பி விடுவார்கள். ஊருக்கு ஊர் கட்டுக்கதைகளில் சில ஒற்றுமையிருக்கும். கதையில் அதிசயம் நடப்பது பொதுவானதொன்றாகும். அப்போது தான் கதையில்; சுவர்ஸ்யம் இருக்கும்.

ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண். மூக்கு. காது. வாய். வைத்து கற்பனையில் கதை உருவாக்கப்படும். அது காலப் போக்கில் பலரின் கற்பனைகளுடன் கலந்து காது அல்லது மூக்கு நீண்டு மாற்றமடையும். இவை எழுத்தில் பதியாத கதைகள். சில சமயம் நம்பக் கூடியவை. சில சமயம் இப்படியும் நடக்குமா என்று சிந்திக்க வைக்கும். அனேகமாக இவை கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள். மசூதிகளுடன் தொடர்புள்ளவை. காரணம் “அந்தக் கோயிலில் வாழ்ந்த சித்தர் அந்தக் கோயிலில் பல காலமாக இருக்கும் வேப்பமர இலையைப் பாவித்து முடமான பிள்ளையை எழுந்து நடக்க வைத்தார், கண்தெரியாத ஒருவனுக்குப் பார்வை கொடுத்தார் என்றால் அதே நிலையில் உள்ளவர்களும் தமக்கு அது நடக்காதா என்று திரண்டு அங்கு செல்வார்கள. அக்கதையினால் வேப்ப மரமும் கோயிலும் பிரபல்யமடையும். சில வேலை பிரசித்தமான ஊர் பெயர் தோன்றியதைப் பின்னனியாக வைத்து கதைகள் உருவாக்கப்பட்டவை. ஊர் பெயர்கள் அனேகமாக இனத்தின் பெயர். நதி. மரம், மலை, வழிப்பாட்டு தளத்துடன் இணைந்தவையாக இருக்கும். இதற்கு உதாரணமாக கதிர்காமத்தை எடுத்துக் கொள்ளலாம். நெற்கதிர்கள் நிறைந்த கமம், கதிர்காமமாயிற்று. சிங்களத்தில “கம” என திரிபடந்துள்ளது. இது போன்றே வில்லு வில்லுவாக மாறியுள்ளது. முருகன் அங்கு வள்ளியை சந்தித்ததால் கதிர்காமன் எனப் பெயர் அவருக்கு வந்தது. அதனால் கதிhகாமர் என்ற பெயர்கள் உள்ளவர்கள் எல்லோரும் கடவுள்கள் என்பதில்லை.

அங்கு நடந்த அதிசயங்களைப் பற்றி ஏராளமான கதைகளுண்டு. முருகன் வள்ளியைக் கண்டு காதலித்து திருமணம் செய்த கதை. அந்தச் சுற்றாடலில் உருவாகியதே. பின்னர் சினிமாவானது. மரபுபுக்கதைகள் பலவற்றிற்கு ஆதாரம் கிடையாது. சில வரலாற்றில பதிவாகியுள்ளன. தமிழ் நாட்டில் மரபு வழி வந்த கதைகள் ஏராளம். அக்கதைகளை அடிப்படையாக கொண்டு கிராமத்துத் தெய்வங்களான மாரியமட்மன், மாடாசாமி, கருப்பண்ணாசாமி, மதுரைவீரன், சுடலைசாமி; போன்ற தெய்வ வழிபாடுகள் கிராமமக்களிடையே தோன்றியுள்ளது. இக்கதைகளைப் பதிவு செய்யாவிட்டால் காலப்போக்கில் அவை மறந்து விடும்.

கட்டுக் கதைகளை மரபு வழி வந்த நாட்டுக் கதைகள் எனவும் அழைக்கலாம். சில பாட்டிமார் தமது பேரப்பிள்ளைகளை தூங்க வைக்க சொல்லும் பாட்டிக் கதைகளாகும். கட்டுக்கதைகள் சில சமயம் சினிமாவாக மாறியதுண்டு. சுற்றிலாப் பயணிகளுக்குப் புராதான இடங்களைக் காட்டுபவர் அவ்விடத்தோடு தொடர்புள்ளமரபு வழிவந்த கதையைச் சொல்லி அவர்களின் பாராட்டைப் பெறுவார். ஆனால் அவர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதறகு உதாரணம் மாமல்லபுரத்தை வெளிநாட்டுப் பயணிகளுக்கு சுற்றிகாட்டுபவருக்குப் பல்லவர்களைப் பற்றி தெரிந்திருக்க தேவையில்லை. எல்லாமே கதைசொல்லும் விதத்தில் தங்கியுள்ளது. இக்கதைகொத்தில் வரும் சரதியல், சிகிரியா, அசோக்கமாலா, பயிரவ மலை போன்ற கதைகள் சிங்கள மக்களிடையே பிரபல்யமான கதைகள். சினிமாவாகவும் எடுக்கப்பட்டுள்ளது

பொன் குலேந்திரன் – மிசிசாகா – கனடா

14-4.2016

♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book